Share on Social Media


பனாஜி :கோவாவின் முன்னாள் முதல்வரான ரவி நாயக் காங்.,கில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது கோவா மாநிலத்தில், காங்.,குக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.கோவாவில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.

கடந்த 2017 தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்., 17ல் வென்றது. ஆனால் 13 தொகுதி களில் வென்ற பா.ஜ., மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.அதைத் தொடர்ந்து காங்.,கில் இருந்து பல எம்.எல்.ஏ.,க்கள் விலகினர். அதில் பெரும்பாலானோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.

முன்னாள் முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரோ சமீபத்தில் காங்.,கில் இருந்து விலகி திரிணமுல் காங்.,கில் இணைந்தார்.

இந்நிலையில், மற்றொரு முன்னாள் முதல்வரான ரவி நாயக்கும் கட்சியில் இருந்து இன்று (டிச. 07) விலகினார். தன் எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.அவரது இரண்டு மகன்கள் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தனர். அதனால் இவரும் பா.ஜ.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி நாயக் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டசபையில் காங்.,கின் பலம் மூன்றாகக் குறைந்து உள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *