Share on Social Media


இந்தியாவில் கோவாக்சின் பயன்பாட்டுக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும்கூட, அதற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் அனுமதி வழங்கவில்லை. இதுவரை, இந்தியா, கயானா, மெக்சிகோ, ஈரான், நேபாள், பிலிப்பைன்ஸ், ஜிம்பாப்வே, மொரீஷியஸ், பாராகுவே ஆகிய 9 நாடுகளில்தான் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் கோவாக்சினுக்கு அனுமதி இல்லாததால், இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவே விரும்புகின்றனர்.

இதேநேரம், பள்ளிப் படிப்பை சமீபத்தில் முடித்த மாணவர்கள் பலரும் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வுகளை எழுதுவதற்காக பல மாணவர்கள் கோவாக்சின் போட்டுக்கொண்டனர். ஆனால், அதற்குப் பின்னர், அவர்கள் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காகச் செல்வதில் கோவாக்சின் தடையாக இருக்குமோ என்று அஞ்சுகின்றனர். இது பல மாணவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியுள்ளது.

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்

இதுகுறித்துப் பேசிய மத்திய அரசின் புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், “இவையனைத்துமே பொய். முதலில், எந்த நாடுமே இந்தத் தடுப்பூசியைப் போட்டால்தான் அனுமதிப்பேன் என்று இதுவரை சொல்லவில்லை. பல மூன்றாம் உலக நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் கிடையாது. அதனால், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம்தான் தடுப்பூசியை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறது. உலகளவில் 17 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் எதை வாங்குவது என்ற கேள்வி வரும்போது, அதற்கென ஒரு கமிட்டி அமைத்து எந்தெந்த தடுப்பூசிகளை வாங்கலாம் என்று தீர்மானிக்கிறது. அதில், பரிசோதனைக் கட்டங்கள் முடிந்து முழுமையான ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளை மட்டுமே அவர்கள் வாங்குவதற்குத் தீர்மானிக்கிறார்கள். அதில் கோவாக்சின் இல்லை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *