Share on Social Media


காரைக்கால் : காரைக்காலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வாரச்சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று இந்திய கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மதியழகன், நேற்று கலெக்டர் அர்ஜூன் சர்மாவை சந்தித்து அளித்த மனு:காரைக்காலில் நகராட்சி திடலில் ஞாயிற்று கிழமை தோறும் வாரச் சந்தை இயங்கி வந்தது. சந்தையில் மளிகை, காய்கறி, பழம், கோழி மற்றும் வீட்டு தளவாடப் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.இந்த சந்தை சுற்று வட்டார மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 23ம் தேதி முதல் சந்தை மூடப்பட்டது.

கொரோனா ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து அனைத்து வர்த்தக நிறுவனங்கள், பஸ் போக்குவரத்து, தியேட்டர், மதுக்கூடம் என அனைத்தும் திறக்கப்பட்டு விட்டது.ஆனால், வாரச் சந்தை மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதனால், மூடப்பட்ட வாரச் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *