Share on Social Media


சென்னை-‘கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று, இரவு 9:௦௦ மணி வரை வியாபாரம் நடக்கும்’ என, வியாபாரிகள் அறிவித்துஉள்ளனர்.

கோயம்பேடில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள் விற்பனைக்கு, தனித்தனியாக மார்க்கெட் இயங்கி வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு நாளில் மார்க்கெட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பராமரிப்பு பணி நடக்கிறது.இந்நிலையில், நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த போவதாக, அரசு அறிவித்துள்ளது.இதற்காக, இன்று இரவு 9:௦௦ மணி வரை, அனைத்து கடைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.அதன்படி, கோயம்பேடு மார்க்கெட், இன்று இரவு 9:௦௦ மணி வரை இயங்கும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.நாளை மார்க்கெட் இயங்குமா என்பது குறித்த முறையான அறிவிப்புகளை, அரசு வெளியிடவில்லை.இதனால், வியாபாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில், தோட்டக்கலைத்துறை வாயிலாக மட்டுமே, காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.தோட்டக்கலைத் துறையால், அனைத்து வகை காய்கறிகள், பழங்களை கொண்டு வருவது சாத்தியமில்லை.

மார்க்கெட்டை மூடினால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள உணவகங்களின் காய்கறிகள், தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும்.அம்மா உணவகங்களுக்கும் காய்கறிகள் கிடைக்காது. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில், மொத்த விற்பனை கடைகளை தொடர்ந்து திறக்க வேண்டும்.உணவகங்களுக்கு தேவையான காய்கறிகளை, வாகனங்களில் வாங்கி செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *