Share on Social Media


சென்னை-ஊரடங்கு தளர்விற்கு பின் குவிந்த வியாபாரிகளால், கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்தது.

தளர்வுகளற்ற ஊரடங்கால், சென்னையில், கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், நேற்று முதல் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. நேற்று முதல் கடைகள் மட்டுமின்றி, நடைபாதைகளிலும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதை அடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர்.கூட்டம் அதிகரித்ததால், காய்கறிகளின் விலையை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் திடீரென உயர்த்தினர்.

இவற்றை வாங்கி சென்ற வியாபாரிகள், மூட்டை ஏற்றி இறக்கும் கூலி, வாகன வாடகை, போக்குவரத்து போலீஸ் செலவு, லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு, கூடுதல் விலையில், பொருட்களை விற்பனை செய்தனர்.கோயம்பேடில், சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை என அறிவித்த நிலையில், அனைத்து கடைகளிலும், ஐந்து கிலோவிற்கு குறைவாகவும், காய்கறிகள் விற்கப்பட்டன.சமூக இடைவெளியை மறந்து, வியாபாரிகள் குவிந்தனர். இதனை, அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *