Share on Social Media


பெரியகுளம்-தினமலர் செய்தி எதிரொலியாக கால்நடைகளை பாதித்த கோமாரி நோய் பரவலை தடுக்க தேனி மாவட்டத்திற்கு 10 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஓரிரு நாளில் தடுப்பூசி முகாம் துவங்குகிறது. பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளார், காமக்காபட்டி பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக மாடுகள் வளர்க்கின்றனர். தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் ஏராளமான மாடுகள் கோமாரி நோயால் அவதிப்பட்டது. சில மாடுகள் இறந்தன. மூன்று மாத கன்றுகுட்டி முதல் அனைத்து வயது மாடுகளுக்கும் ஆண்டிற்கு இரு முறை (மார்ச்,ஆகஸ்டில்) கோமாரி தடுப்பூசி செலுத்த வேண்டும்.

ஆகஸ்டில் செலுத்த வேண்டிய ஒரு லட்சம் தடுப்பூசி இன்னும் வழங்கவில்லை. கோமாரிநோய் தாக்கத்தால் மாடுகள் அவதிப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தாவிட்டால் பரவல் அதிகரித்து கால்நடைகள் பாதிக்கும் செய்தி வெளியிடப்பட்டது.தினமலர் செய்தி எதிரொலி:தேனி கால்நடை புலானாய்வு துணை இயக்குனர் கணபதிமாறன் தலைமையில் கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நோய் பாதித்த மாடுகளின் ரத்தமாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 20 மாடுகளுக்கு கோமாரிநோய் உறுதி ஆனது.

பத்தாயிரம் டோஸ் ஒதுக்கீடு: தினமலர் செய்தி எதிரொலியாக தேனி மாவட்டத்திற்கு முதல்கட்டமாக பத்தாயிரம் டோஸ் நேற்று வந்துள்ளது. மேலும் 90 ஆயிரம் டோஸ் விரைவில் கிடைக்கும். முதல் கட்டமாக புல்லக்காபட்டி, காமக்காபட்டி உள்ளிட்ட பத்து கிராமங்களில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கும் என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *