Share on Social Media


மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை: சேவை, தீர்மானம், உறுதி தேவை என பா.ஜ., நிர்வாக குழுவில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இவை யாருக்காக… கார்ப்பரேட்டுகளுக்காகத் தான். கார்ப்பரேட்டுக்கு சேவை செய்ய, தன் துாக்கத்தை மட்டும் அல்ல, நாட்டையே தியாகம் செய்த நபர் தான் மோடி.

கொள்கைக்காக பிரதமர் மட்டுமல்ல, நாட்டையே காட்டிக் கொடுக்க தயங்க மாட்டீர்கள் என்பது, கம்யூ.,க்கள் மீதான நாட்டு மக்களின் எண்ணம். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

மக்கள் நீதி மய்ய துணை தலைவர் மவுரியா அறிக்கை: பெருமழை, வெள்ளம் காரணமாக பாதித்த மக்களுக்கு மக்கள் நீதி மய்ய கட்சியினர் உதவி புரிய வேண்டும். மாவட்ட செயலர்கள், கட்சி நிர்வாகி மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி, மக்களின் துயர் துடைக்க வேண்டும்.

தேர்தல்களில் தேறாத கட்சியில் எத்தனை பேர் மிச்சம் இருக்கின்றனர் என்பதை கணக்கிடுவதற்காக இந்த ஏற்பாடா என கேட்கத் தோன்றுகிறது !

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: முல்லை பெரியாறின் பேபி அணையில் மரங்களை வெட்ட அனுமதி அளித்ததற்கு, கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தற்போது அனுமதியை திரும்பப் பெற்ற கேரள அரசை கண்டிக்காமல், மவுனம் காக்கும் மர்மம் என்ன?

இப்படி எல்லாம் அவருக்கு கிடுக்கி போட்டால், என்ன செய்வார். கொஞ்சம் விட்டுப்பிடிங்க சார்…

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: பேரிடர் மேலாண்மைக்குரிய செயல் திட்டத்தை, போர்க்கால அடிப்படையில் உருவாக்கும் பணியில் முதல்வர்- ஸ்டாலின் ஈடுபட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்யும் பணியில், காங்கிரசார் உடனே ஈடுபட வேண்டும்.

முதல்வர் தலைமையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், காங்கிரசுக்கு அங்கு என்ன வேலை இருக்கப் போகிறது… சும்மா கட்சியினரை உசுப்பேற்றாதீங்க சார்!

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை, அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சியினர் உறுதி செய்ய வேண்டும்.

மழையால் கட்சியினர் சுருண்டு படுத்துள்ளனர். அவர்களை உசுப்பேற்றவும், எத்தனை பேர் கட்சியில் உள்ளனர் என்பதை கணக்கிடவும் இந்த ஏற்பாடா?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *