இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அவ்வை நகர் பகுதி மக்கள் அனைவரும் இரவும் பகலுமாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 7-நாள் கெடு நேற்று 17-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இதனால், இன்று 18-ம் தேதி காலை 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட மக்களை அப்பகுதியில் இருந்து ஆகற்றும் விதமாக காவல்துறையினர் கைதுசெய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். மேலும், எஞ்சியிருக்கும் வீடுகளை சென்னை மாநகராட்சியினர் தற்போது முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், “ 60 ஆண்டுகளாக இங்குதான் வசித்து வருகிறோம். இப்போது திடீரென வீடுகளை இடித்து, வெளியேற்றினால் நாங்கள் எங்கே செல்வோம்? மேம்பாலம் கட்டுவதற்காக இடத்தை எடுத்துக்கொண்டு, எஞ்சியிருக்கும் எங்கள் வீடுகள் இருக்கும் இடத்தை மட்டும் அப்படியே எங்களிடம் ஒப்படைக்கக்கோரி கேட்டோம். மாநகராட்சி அதிகாரிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்றுகூறி, எங்கள் வீடுகள் முழுவதையும் இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இடித்த வீடுகளுக்கு மானியமோ, நாங்கள் வாழ்வதற்கு மாற்று வாழ்விடமோ அரசு தரப்பில் கொடுக்கமுடியாது என சொல்லிவிட்டார்கள்! நாங்கள் இப்போது, எங்கள் உடமைகள், குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கிறோம்” என தெரிவித்தனர்.