Share on Social Media

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவான சி.எஸ்.ஐ.ஆர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையில் கொரோனா நோய்த் தொற்றானது குறிப்பிட்ட ரத்த வகை உள்ள நபர்களை அதிகமாக பாதிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

10,000 கொரோனா நோயாளிகளைக் கொண்டு சேகரித்த தரவுகள் 140 மருத்துவர்களால் சரிபார்க்கப்பட்டு பின்வரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. AB மற்றும் B ரத்தவகை உள்ளவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். O ரத்தவகையினருக்கு பாதிப்பு குறைவாக ஏற்படுவதுடன் வைரஸ் தாக்கம் ஏற்பட்டாலும் அறிகுறிகள் இல்லாமல் லேசாக தான் பாதிப்பு இருக்கும் என கணக்கெடுப்பு முடிவுகள் கூறுகின்றன.

ரத்தம்.

மேலும் ஆய்வில், அசைவம் உண்பவர்களுக்கு பாதிப்பு அதிகமாகவும், சைவம் உண்பவர்களுக்கு பாதிப்பு குறைவாகவும் இருப்பதாகவும், சைவ உணவுகளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாலும் நார்ச்சத்து அழற்சிக்கு எதிராகச் செயலாற்றுவதாலும் நோய் பாதிப்பதைத் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சி.எஸ்.ஐ.ஆர்-ன் கருத்துகள் குறித்து ரத்தமாற்று சிகிச்சை மருத்துவர் சண்முகபிரியாவிடம் பேசினோம்,

“சி.எஸ்.ஐ.ஆர் வெளியிட்டிருக்கும் தகவல்கள் அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டவை அல்ல. இது ஒரு சர்வேயின் முடிவு மட்டும் தான். எனவே இதனை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. இதேபோல அமெரிக்காவில் ஜாமா என்னும் நிறுவனம் 11,000 பேர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் AB ரத்தவகைக்கும் கோவிட் தொற்றிற்கும் தொடர்பில்லை என அறிவுத்துள்ளது. எனவே AB ரத்த வகையினர் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. இதர ரத்தப் பிரிவினரும் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.

WhatsApp Image 2021 05 14 at 3 28 21 PM Tamil News Spot
மருத்துவர் சண்முகபிரியா

மரபணு அடிப்படையில் சிலருக்கு பாதிப்பு அதிகமாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் சைவ உணவு உண்பவர்களுக்கு தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் என கூறமுடியாது. வெஜிடேரியன் டயட் போலவே நான்-வெஜ் டயட்டிலும் நார்ச்சத்து கிடைக்கும். எனவே அசைவம் உண்பவர்கள் அச்சப்பட தேவை இல்லை. வெஜிடேரியன் டயட், தொற்று பாதிப்பைக் குறைப்பதாகவும் ஆதாரம் இல்லை. குடும்பத்தில் உள்ள சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருப்பதனால் நோய்த் தொற்று சிலருக்கு ஏற்படுவதில்லை. வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு உள்ளவர்கள் போன்றோருக்கு நோய்த் தடுப்பாற்றல் குறைவாக இருப்பது இயல்பு” என மருத்துவர் சண்முகபிரியா கூறினார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *