Share on Social Media


* இந்த கோவிட்-19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது தான் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் அடுத்த தரவு ‘ஃபியூரின் கிளீவேஜ் சைட்’ (Furin Cleavage site).

இது சற்று அதீத மரபணு அறிவியல் சார்ந்த விளக்கம். அதை இயன்றவரை எளிதாக்கி பகிர்கிறேன்.

ஸ்பைக் புரோட்டீன் குறித்து முன்னர் பார்த்தோம் அல்லவா? மனிதர்க்கு தொற்றைப் பரப்ப மனித செல்களோடு ஒட்டிக்கொள்ளும் இந்த பகுதி இரண்டு பாகங்களைக் கொண்டது. முதல் பகுதி S1 தொற்று ஏற்படுத்த வேண்டிய உயிரினத்தை அடையாளம் காணும். இரண்டாவது பகுதி S2 தொற்றை பரப்பும். இந்த இரு பகுதிகளும் பிரிவுற்றால் தான் தொற்று பரவும். அந்த பிரியும் பகுதிக்கு தான் ‘ஃபியூரின் கிளீவேஜ் சைட்’. இது வௌவால்களிடம் இருக்கும் பீட்டா கொரோனா வைரஸ்களில் கிடையாது. இது மனித செல்களில் காணப்படும் ஒரு பகுதி. இயற்கையில் உருவான சார்ஸ் வைரஸில் இந்த ‘ஃபியூரின் கிளீவேஜ் சைட்’ வெவ்வேறு இடங்களில் இருக்கின்றது. ஆனால் கோவிட் 19 வைரஸில் இது மனித செல்களில் எங்கு இருக்குமோ அந்த சரியான இடத்தில காணப்படுகிறது. ஒரு வைரஸின் தொற்று ஏற்படுத்தும் திறனை அதிகரிக்க பரிசோதனை கூடங்களில் இந்த ‘ஃபியூரின் கிளீவேஜ் சைட்’ சரியான இடத்தில் உருவாக்கப்படும் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. இருப்பினும், இது வௌவால்களிடம் இருந்து பரவி மனிதர்களின் உடம்பில் உருமாறியிருக்கலாம் அல்லது இந்த ‘ஃபியூரின் கிளீவேஜ் சைட்’ இருக்கும் கண்டறியப்படாத புதிய வகை பீட்டா கொரோனா வைரஸாக இருக்கலாம் என்று அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் எதை நம்புவது என்பது நம்முடைய சாய்ஸ். இவைமட்டுமல்ல இன்னும் இதுபோல சில கூடுதல் அறிவியல் விளக்கங்களும் முன்வைக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்
Pixabay

எல்லாம் சொல்லியாயிற்று, இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். அதுவே முக்கியமானது. இந்த கோவிட் – 19 கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடை இதுதான். இரண்டு சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டியிருக்கிறது. மேலே குறிப்பிட்டதுபோல நிறைய சிறு சிறு தரவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடக்கின்றன. ஆனால் உறுதிபட எதுவுமே இன்று வரை நிரூபிக்கப்படவில்லை.

வூஹான் வைரஸ் பரிசோதனை நிறுவனமோ, சீன அரசோ, உலக வைரஸ் ஆராய்ச்சியாளர்களோ, ஆராய்ச்சிக்கு நிதி அளித்த அமெரிக்கா நிறுவனமோ எவ்வித அரசியல் காரணங்களையும் புறந்தள்ளிவிட்டு, அவர்களிடம் இருக்கும் தரவுகளை பகிர்ந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு காண முடியும். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம்.

பரிசோதனை கூட ஆராய்ச்சியின் விளைவாகவோ அல்லது கண்டறியப்படாத இயற்கை மூலமாகவோ இந்நோய் பரவியிருக்கலாம். இரண்டும் அறிவியல் பிழைகள் தாம். ‘Science is a costly affair’ என்பார்கள். இம்முறை இந்த அறிவியல் பணத்தை அல்ல மனித உயிர்களை தட்சணையாக்கிக் கொண்டிருக்கிறது. மீள்வதற்கு, அரசு இயந்திரங்களும், இயற்கையும் இரக்கம் காட்டட்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *