Share on Social Media


தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. அதேநேரத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவது சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்துவரும் நிலையில் கடந்த 5 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதன்படி ஒரே நாள் பாதிப்பு 33 ஆயிரத்து 764 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்து 325 சிறார்கள் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 29 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து 475 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. இணை நோய் இல்லாத 128 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் முதல்முறையாக சென்னையை விட கோவை மாவட்டத்தில் அதிகமாகவும் மற்ற ஒருசில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. ஒரேநாளில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 268 பேரும், சென்னையில் 3 ஆயிரத்து 561 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 880 பேரும், திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 775 பேரும், ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 642 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

>8 கோடி கிலோ கறிக்கோழி தேக்கம், ரூ.700 கோடி நஷ்டம்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் 8 கோடி கிலோ கறிக்கோழிகள் தேக்கம். 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கோழிப் பண்ணையாளர்கள் தரப்பில் கவலை.

>’முதல் அலையை தடுக்காததே 2வது அலைக்கு காரணம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா முதல் அலையை முற்றிலும் ஒழிக்காததால் தான் இரண்டாம் அலை உருவானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

>பரிசோதனை முடிவுகளை விரைவாக வெளியிடுக

சென்னையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்க மூன்று நாட்கள் வரை ஆவதாக தகவல்.விரைந்து வெளியிட வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை. ஒருநாளில் சென்னையில் 30,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முடிவுகள் கிடைக்க 1 நாள் முதல் 3 நாட்கள் வரை ஆகிறது. Positive என்றால் மருத்துவமனைகளில் இருந்து அலைப்பேசிக்குஅழைத்து சொல்கின்றனர். நெகடிவ் என்றால் சொல்வதில்லை. பெரும்பாலும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை. குறுஞ்செய்தி மூலம் ஒரே நாளில் முடிவுகளை தெரிவிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

>சென்னையில் காய்கறி விற்பனையை கண்காணிக்க சிறப்புக்குழு

வீடு தேடி வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் காய்கறி விற்பனையை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், காய்கறி விற்பனை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

>வீடில்லா மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

தமிழகத்தில் வீடில்லா மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.முருகானந்தம் என்பவர் அடையாள அட்டை இல்லாத வீடில்லா மக்களைக் கருத்தில் கொண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் வீடில்லா மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவோ, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவோ முடியாத நிலையில் தடுப்பூசி செலுத்தினால் தான் அவர்களின் உயிரை பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

எனவே அடையாள அட்டை, வீடில்லா மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வீடில்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான வழக்குகளுடன் விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *