Share on Social Media


பெங்களூரு : ”பெங்களூரு சர்வதேச மையத்தில், அமைக்கப்பட்ட 10 ஆயிரம் படுக்கை கொண்ட, கொரோனா சிகிச்சை மையத்தின் கதி என்ன என்பதை, மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும்,” என காங்., முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தினார்.

அறிக்கை ஒன்றில் அவர் நேற்று குறிப்பிட்டதாவது:யுத்த காலத்தில், ஆயுத பயிற்சி செய்வதை போன்று, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு, அரசு படாத பாடுபடுகிறது. முந்தைய ஆண்டு கொரோனா நோயாளிகளுக்காக, துமகூரு சாலையிலுள்ள, பெங்களூரு சர்வதேச மையத்தில், அமைக்கப்பட்ட 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட, கொரோனா சிகிச்சை மையத்தின் கதி என்ன என்பதை, மக்களுக்கு அரசு விவரிக்க வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய் செலவில், அந்த சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது. தற்போது அந்த சிகிச்சை மையம் செயல்படுகிறதா. அதன் நிலை என்ன. நோயாளிகள் படுக்கை, ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

படுக்கைகளுக்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இடையே, இழுபறி நடக்கிறது. அரசின் உத்தரவை, தனியார் மருத்துவமனைகள் பொருட்படுத்தவில்லை. நோயாளிகளின் சிகிச்சைக்கு, அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *