Share on Social Media


இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் வீரசேனன், ‘’வாக்கு எண்ணிக்கைக்காக ஊரடங்கை தளர்த்துனது, வேதனையான விஷயம். மற்ற நாள்களை விட ஞாயிற்றுக்கிழமைகள்ல, இறைச்சி கடைகள்ல அதிகளவுல மக்கள் கூடுறாங்க. இதனால் கொரோனா பரவல் அதிகமாகுங்கறதுனாலதான், ஞாயிற்றுக்கிழமைகள்ல ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கைக்காக மே 2-ம் தேதி ஊரடங்கை தளர்த்தினால், கண்டிப்பாக இறைச்சி கடைகள்ல கூட்டம் அதிகமாகி, கொரோனா பரவும். ஊரடங்கை தளர்த்தாமலே வாக்கு எண்ணிக்கையை நடத்த திட்டமிட்டிருக்கலாம். ஒரு தொகுதிக்கான வாக்குகளை எண்ண, அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட அதிகபட்சம் 100 பேர் இடம்பெறுவாங்க.

கொரோனா தடுப்பு நடைமுறைகளோடு இவங்களை மட்டும் அனுமதிச்சாலே போதும். இவங்களுக்கு போக்குவரத்துக்கான சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கி, ஊரடங்கை கடைப்பிடிக்கலாம். ஒரு மையத்துல நாலஞ்சி தொகுதிகளின் வாக்குகளை எண்ணுவதாக இருந்தாலும் கூட அதிகபட்சம் 500 பேர்தான் கூடுவாங்க.

ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் ஆர்வம் மிக்க பொதுமக்கள் உள்பட மிகுந்த ஆர்வத்தோடு ஓவ்வொரு மையத்துக்கு வெளியில ஆயிரக்கணக்கான பேர் கூடுவாங்க. டாஸ்மாக் கடைகள்லயும் கூட்டம் அலைமோதும். இறைச்சி கடைகள்லயும் பெருமளவும் கூட்டம் கூடும். இதனால் கண்டிப்பாக கொரோனா அதிகரிக்கும். வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டவங்களை மட்டும், மே 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியில் நடமாட அனுமதிச்சாலே போதும்.

ஞாயிற்றுக்கிழமை வழக்கமான ஊரடங்கோடு வாக்கு எண்ணிக்கையை நடத்தினால், அரசியல் கட்சிகளின் ஆடம்பர கொண்டாட்டங்கள், மோதல்கள், அலப்பறைகளையும் தவிர்க்கலாம். கொரோனா அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்குறதுக்காக, கல்யாணத்துக்கு இவ்வளவு பேருதான் அனுமதி, இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேருதன் அனுமதினு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குறாங்க. ஆனால் தேர்தல் கொண்டாட்டத்துக்கு மட்டும் கட்டுப்பாடுகளே கிடையாதா? கொரோனா இரண்டாம் அலை மக்களை அச்சுறுத்திக்கிட்டு இருக்கு. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, ஊரடங்கை, வாக்கு எண்ணிக்கைக்காக தளர்த்தறதுங்கறது, மிகவும் தவறான செயல். தேர்தல் ஆணையமே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள்ல கவனம் செலுத்தலைனா, பொதுமக்கள் எப்படி பொறுப்போடு நடந்துக்குவாங்க. கோரோனா அதிகமானால், தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேத்துக்கணும்’’ என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *