Share on Social Media


ஊரடங்கு, தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைஸர் போன்றவற்றால் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் இந்திய அளவிலும், மாநில அளவிலும் குறைந்துவருகிறது. ஆனால், தீப்பொறி அணைந்துவிடவில்லை. ஆங்காங்கே தீப்பொறிகள் இருக்கின்றன. பற்றிக்கொள்வதற்கான சூழல் உருவாகும்போது, மீண்டும் அது தீவிரமாகப் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, மூன்றாவது அலை வருகிறதோ இல்லையோ, அதை எதிர்கொள்வதற்கு உரிய முன்னேற்பாடுகளை இப்போதே மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்.

மூன்றாம் அலை வரும் பட்சத்தில், அதன் பாதிப்புகள் எந்த மாதியாக இருக்கும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து டெல்லியில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் துறையில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானியான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.

மருத்துவமனையில்

மருத்துவமனையில்

“கொரோனா பெருந்தொற்றுப் பரவலை, இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ பரவலுடன் ஒப்பிடலாம். மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில்தான் ஸ்பானிஷ் ஃப்ளூ முதலில் பரவியது. ஐரோப்பாவிலிருந்து வந்ததால், ஆங்கிலேயர்கள் அதிகம் வாழக்கூடிய நகரங்களில் முதலில் அது பரவியது. அடுத்ததாக, மதுரை, தஞ்சாவூர் போன்ற சிறிய நகரங்களில் பரவியது. மூன்றாம் கட்டமாக கிராமப்புறங்களில் பரவியது. பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களிடையே பரவியபோதுதான், அது பெரிய பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவலும் அப்படித்தான் இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *