Share on Social Media


பின்னர், “வேறு சில மாநில அரசுகள் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இழப்பீடு வழங்குவதால், தமிழக அரசு விரும்பினால் கூடுதல் இழப்பீடு வழங்கலாம். கூடுதலாக இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் அடுத்த வாரம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

கொரோனா பெருந்தொற்றால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகள், தலா ரூ.50 ஆயிரம் வழங்கும் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கொரோனாவால் மரணமடைபவர்களின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், `அனைத்து மாநிலங்களிலும் கொரேனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்று கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *