Share on Social Media


இதைத் தொடர்ந்து, 183 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தது மத்திய அரசு. அதில், “தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம்-2005 ஐப் பொறுத்தவரையில் வெள்ளம்,புயல் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நிவாரண நிதி வழங்கலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவது என்பது இயலாத விஷயம். கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றால் பேரிடர் மேலாண்மை நிதியத்தில் உள்ள நிதியைவிடக் கூடுதலான நிதி தேவைப்படும்.

அரசின் வரி வருவாய் குறைந்து, மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், கொரோனாவால் மரணமடைந்த எல்லோருக்கும் நிவாரணம் வழங்கினால் மற்ற நடவடிக்கைகளுக்கு நிதி இல்லாத சூழல் உருவாகும். ஆகையால் இந்தக் கோரிக்கை மாநில அரசுகளின் நிதிநிலைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது. எனவே லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க இயலாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா மரணம்

கொரோனா மரணம்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, “கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்குத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்து மத்திய அரசும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து ஆறு வாரக் காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

இழப்பீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையிலும், நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ரூ.4 லட்சம் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட தொகை நிவாரணமாகக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான செய்தி வருமா அல்லது மீண்டும் இதே நிலைப்பாட்டைத்தான் மத்திய அரசு தெரிவிக்குமா என்பதுதான் மக்கள் மத்தியில் அலையடிக்கும் கேள்வி.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *