Share on Social Media


குழந்தைகள் தடுப்பூசி தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியம் தொடர்பாக யுனிசெஃபின் தொடர்பு நிபுணர் சுகதா ராவ்விடம் பேசினோம். `குழந்தைகளை ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்பாற்றலுடனும் இருக்கத் தடுப்பூசிகள் செலுத்தவேண்டியது மிக அவசியம். யுனிசெஃப் தடுப்பூசி மட்டுமில்லாது, குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் தடுப்பூசி போடும் திட்டமானது இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியான திட்டம். இந்தியாவின் பல மாநிலங்களில் தமிழகத்தின் செயல்திட்டம் தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதைப் பொருத்தவரை பெற்றோர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் முக்கிய பணி. சமூகத்தில் உள்ள ஒரு குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்தியும், இன்னொரு குழந்தைக்கும் செலுத்தாமல் இருக்கக் கூடாது. அது சமநிலையைப் பாதிக்கும். சமூகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தி ஒரு சமநிலையை உருவாக்க வேண்டும். தற்போது தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டதற்கு கொரோனா மட்டுமில்லாது, பல்வேறு காரணங்கள் உள்ளது. சில நாடுகளில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி, பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தாத நிலையும் உள்ளது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கிறது. அந்த இடங்களிலும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க யுனிசெஃப் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குழந்தைகளை நிமோனியா, போலியோ போன்ற பல்வேறு நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள அவர்களுக்குக் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்தவேண்டும்” என்று பேசினார்.

தடுப்பூசி

தடுப்பூசி

எந்த சூழலாக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டியது அவசியம். குழந்தைகளுக்குச் சுகாதாரமான சூழலை உருவாக்குவதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் போலியோ பதிவாகவே இல்லை. இதற்கு ஒரே காரணம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போலியோ சொட்டுமருந்து முகாம்கள் தான். இதுபோலவே குழந்தைகளுக்கு வரும் பல்வேறு நோய்களும் இந்தியாவிலிருந்து மறைந்துகொண்டு இருக்கிறது. அதற்குக் காரணமும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாகத் தடுப்பூசி செலுத்தப்படுவது தான். இந்நிலையில், கொரோனா போன்ற காரணங்களுக்காகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தவறினால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பாக அமைப்பும்…



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *