Share on Social Media


கடலுார்: பொதுமக்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு: கடலுார் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான தகவல் குறித்து அவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் முடிவுகளை https://cuddalore.nic.in என்ற இணையதளத்தின் மூலம் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் கொடுக்கப்பட்ட எஸ்.ஆர்.எப்.ஐ.டி. மற்றும் மொபைல் எண்களை கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பரிசோதனை செய்த நபர்களின் மொபைல் எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பை பயன்படுத்தி ஆன்ராய்டு மொபைல்களில் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அவ்வாறு பதிவிறக்கம் செய்த முடிவுகள் 96 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லத்தக்கது.

கடலுார் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பரிசோதனை ஆய்வகம் மூலம் செய்யும் பரிசோதனை முடிவுகளை மட்டுமே மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *