Share on Social Media


தேனி மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா 2வது அலை பரவலை கட்டுக்குள் கொண்டு வரமுடிவு செய்து களமிறங்கியுள்ளனர்.

நோய் தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாய்கிறது. மாவட்டத்திலுள்ள 31 போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில்தடுப்பு நடவடிக்கை, அபராதம், விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அபராதம்தினமும் காலை, மாலையில் மக்கள் கூடும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கு ரூ.500, கார், டூவீலர்களில், வேன், ஆட்டோக்களில் முகக்கவசம் இன்றி சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பு விதிமீறிய 6630 பேரிடம் இருந்து ரூ.13.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரேநாளில் முகக் கவசம் அணியாத 927 பேரிடம் ரூ.1,85,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.போலீஸ் ஸ்டேஷன் வாரியாக கொரோனா தடுப்பு பணிக்காக எஸ்.ஐ, தகுதியில் ஒருங்கிணைப்பு அலுவலராக மொத்தம் 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் பகுதியில் எத்தனை பேர் பாதிப்பு, எவ்வளவு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மருத்துவமனையில் உள்ளோர், பரிசோதனை மாதிரிகள் சேகரிப்பு விபரங்களை கண்காணித்து எஸ்.பி.க்கு தினமும் அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறைபொதுமக்கள் கொரோனா விதிமீறல்கள், பாதிப்பு விபரம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிக கூட்டம் குறித்து 04546-261 730 என்ற தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறலாம் என போலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *