Share on Social Media


சண்டிகர்: ‘தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஒரு வாரத்திற்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்’ என, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் பலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் அதிகமிருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு ஹரியானா அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அவர்களது மருத்துவ செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‛கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 7 நாள்களுக்கு என ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும். இதேபோன்று தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ரூ.1,000 ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ரூ.1,000 வீதம் 7 நாள்களுக்கு ரூ.7,000 வழங்க வேண்டும். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரசு சார்பில் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும்’ என்றார். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், அவர்களது மருத்துவ செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *