Share on Social Media


பெங்களூரு : ”கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என, முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, தன் அலுவலகமான காவிரியில், சில அமைச்சர்களுடன், முதல்வர் எடியூரப்பா, நேற்று ஆலோசனை நடத்தினார்.

பயனிருக்காது

அதன்பின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், காணொலி மூலம், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள், வெவ்வேறு துறை செயலர்களுடன், ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:மாநில மருத்துவமனைகளில், படுக்கைகள் பற்றாக்குறை அதிகரித்தது, ஆக்சிஜன் பிரச்னை பற்றி, ஊடகங்களில் செய்தி வெளியாகிறது.மத்திய அரசு, 800 டன் ஆக்சிஜன் வழங்கியுள்ளது. மாநிலத்திலும், ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. நோயாளிகளுக்கு பிரச்னை ஏற்படாமல், பார்த்துக்கொள்ள வேண்டும். அவசர நேரத்தில் பயன்படுத்த, மத்திய அரசு, 1.32 லட்சம் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்தை வழங்கியுள்ளது.

இதை சரியாக பகிர்ந்தளியுங்கள். மே 1லிருந்து, 18 வயதுக்கு மேற்பட்டவருக்கும், கொரோனா தடுப்பூசி போட, தயாராக வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டோர், முதல் ‘டோஸ்’ மருந்து பெற்றவர்களுக்கு, தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா சங்கிலியை அறுக்க, மாநிலம் முழுவதும், கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், சில இடங்களில், விதிமுறைகள் பின்பற்றுவதில்லை. இச்சூழ்நிலை தொடர்ந்தால், எத்தனை முறை பொது முடக்கம் அமல்படுத்தினாலும், பயனிருக்காது.

பயனிருக்காது

அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள், விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்த வேண்டும்.மக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதால், காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை தேவையான பொருட்களை வாங்க, அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் யாரும் தேவையின்றி, வீட்டிலிருந்து வெளியே வரக்கூடாது. முக கவசம் அணிய வேண்டும். சமூக விலகல் பின்பற்ற வேண்டும். அவ்வப்போது கைகளை கழுவி, கொரோனா பரவாமல் தடுக்க, அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.மே 12ல், பொது முடக்கம் முடிவுக்கு வரும். அதற்குள் கொரோனா தொற்றை, கட்டுக்குள் கொண்டு வர, மாவட்ட கலெக்டர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும், பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையை, ஏற்படுத்தாதீர்கள். கொரோனாவை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க, அரசு தயங்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *