Share on Social Media


சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3,000ல் இருந்து ரூ.5,000ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய் தொற்றை பொறுத்தவரை இந்த காலத்தில் பல்வேறு சிரமங்களுடன் ஊடகவியலாளர்கள் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். மேலும் மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பலமாக இந்த காலகட்டத்தில் இயங்கி வருவதால் அவர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரிய கூடிய செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை போன்ற ஏதாவது ஒன்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட வைத்திருக்கக்கூடியவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனை உயர்த்தி வழங்க பல்வேறு கோரிக்கைகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் முதலமைச்சர் அதனை பரிசீலித்து தற்போது ஊரடவியலாளர்களுக்கு ஊக்கத்தொகையை 5000ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *