Share on Social Media


கடலுார்-கொரோனா தடுப்பூசி டிமாண்ட் காரணமாக கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று தடுப்பூசி போடாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஜன., 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடலுார் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.இந்நிலையில், மாவட்டத்திற்கு போதிய தடுப்பூசிகளை, அரசு ஒதுக்காததால், தடுப்பூசி போடும் பணி தடைபட்டு வருகிறது.நேற்று காலை மாவட்டத்தில் 840 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருந்தது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால் கடலுார் அரசு மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்காததால் பணிபாதிக்கப்பட்டது.இதனால், பொதுமக்கள், நேற்று காலையில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட சென்றனர்.மருத்துவமனையில் தடுப்பூசி இல்லை. அடுத்து வந்தால் மட்டுமேஅனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறினர்.இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன்திரும்பினர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *