Share on Social Media


வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி கொள்முதல் மற்றும் தடையின்றி கிடைப்பது பற்றி அமெரிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். 5 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டு அமைச்சர்கள், உயரதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுளுவனுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், கொரோனா பாதிப்பு உச்சமடைந்த நேரத்தில் அமெரிக்கா செய்த உதவியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துக்கொண்டார். பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் ஹாவ்ரேல் ஹைன்ஸ் உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாட்டு பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல் மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி கருத்துக்களை இருவரும் பரிமாறி கொண்டனர். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரியன் டாய் உடன் இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பு, கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார எழுச்சி குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் உள்ள அறிவுசார் சொத்து தொடர்பான தடைகளை நீக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கனை, இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *