Share on Social Media


சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் ரத்த தானம் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளால் ரத்த வங்கிகளில் பற்றாக்குறை உள்ள சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்பானது கடந்த ஓராண்டிற்கு மேலாகவே அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த 2வது அலை கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் அச்சத்தில் மக்கள் சிக்கி உள்ளனர். இதன் காரணமாக ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ரத்த வங்கிகளில் ரத்த தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்போர் 15 நாட்களுக்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3 மாதங்களுக்கும் ரத்த தானம் செய்ய முடியாது. 18 – 50 வயதிற்கு உட்பட்டோர் பலர் ரத்த தானம் செய்ய முன்வருவர். ஆனால் அவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போடப்பட உள்ளதால் ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. தற்போது ரத்த தான முகாம்கள் நடத்த முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ரத்தம் தேவைப்படும் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் சிக்குவோருக்கு ரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் ரத்த தானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *