Share on Social Media


இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க முடியாது என Indian Computer Emergency Response Team தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இந்தச் சம்பவம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. APT10 நிறுவனம் சீன அரசுடன் சேர்ந்தே இயங்கி வருவதாக 2018-ல் அமெரிக்காவின் நீதித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்களைத் திருடுவதற்காக, பல சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்தாண்டு நவம்பரில் தடுப்பு மருந்துகள் தொடர்பான தகவல்களைத் திருவதற்கு ரஷ்யா மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தியதாகத் தெரிவித்திருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

கடந்த டிசம்பர் மாதத்திலும் அமெரிக்காவைச் சேர்ந்த Pfizer மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த BioNtech SE ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *