Share on Social Media


தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்ட அரங்கில், நேற்று முன்தினம் மாலை கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. மக்கள் நல்வாழ்வு மற்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கலெக்டர் கிருஷ்ணனுன்னி வரவேற்றார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் போடி ஓ.பன்னீர்செல்வம், கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகராஜன், பெரியகுளம் சரவணக்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்திற்கு கடந்த 7ம் தேதி வரை, ஆக்சிஜன் தேவை 230 மெட்ரிக் டன்னாக இருந்தது.  தற்போது, தமிழக முதல்வரின் முயற்சியால் 600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெறப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘கொரோனா பரவலை  தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, நல்ல நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன்’’  என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *