Tamil News large 2644626 Tamil News Spot
Share on Social Media

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள், 12 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின், குணமடைந்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் அகாடி, கொரோனாவிற்கு பலியானார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

latest tamil news

தற்போது, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைஅடுத்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா சமயத்திலும் அமைச்சர்களை சந்தித்து வந்தார், மோடி. குறிப்பிட்ட துாரத்தில் அமைச்சர்கள் அமர, அவர்களோடு ஆலோசனை செய்து வந்தார். தற்போது இதெல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது.

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., அமைப்பு, ‘இனி, பிரதமர் யாரையும் சந்திக்கக் கூடாது ‘ என, தடை போட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டங்களில், அமைச்சர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். தற்போது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லாமே, ‘வீடியோ கான்பரன்ஸ்’ தான். அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள், இதற்கு முன் காகிதங்களாக இருந்தன. இனி, அந்த விபரங்கள் எல்லாம், ‘இ – மெயில்’ வாயிலாகவே கையாளப்படும்.

latest tamil news

சமீபத்தில், பீஹார் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்காக, பாட்னா சென்றிருந்தார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.வீடு திரும்பிய அவரை, ‘சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என, அவரது மகள் அறிவுறுத்தி உள்ளார். இதனால், இரண்டு நாட்களுக்கு மேலாக, தனி அறையில் இருந்து அலுவலக வேலைகளை கவனித்தாராம், நிர்மலா.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *