Share on Social Media


`இந்தியாவில் சற்று குறைந்த ஒருநாள் பாதிப்பு!’

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு சற்று குறைந்து பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,52,991 ஆக இருந்தது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,76,36,307 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,771. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,97,894 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,45,56,209 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 28,82,204 – பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,51,827 பாதிப்பில் இருந்து மீண்டு, வீடு திரும்பி உள்ளார்கள்.

இந்தியாவில் இதுவரை 14,52,71,186 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *