Share on Social Media



தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 10 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

வைரஸ் பரவியவர்களில் இன்று 1 ஆயிரத்து 131 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் – 10

செங்கல்பட்டு – 559

சென்னை – 3,022

கோவை – 978

கடலூர் – 101

தர்மபுரி – 80

திண்டுக்கல் – 133

ஈரோடு – 309

கள்ளக்குறிச்சி – 20

காஞ்சிபுரம் – 282

கன்னியாகுமரி – 167

கரூர் – 84

கிருஷ்ணகிரி – 87

மதுரை – 239

நாகை – 114

நாமக்கல் – 196

நீலகிரி – 143

பெரம்பலூர் – 3

புதுக்கோட்டை – 66

ராமநாதபுரம் – 19

ராணிப்பேட்டை – 60

சேலம் – 310

சிவகங்கை – 43

தென்காசி – 38

தஞ்சாவூர் – 177

தேனி – 77

திருப்பத்தூர் – 22

திருவள்ளூர் – 469

திருவண்ணாமலை – 106

திருவாரூர் – 104

தூத்துக்குடி – 83

திருநெல்வேலி – 138

திருப்பூர் – 454

திருச்சி – 195

வேலூர் – 233

விழுப்புரம் – 88

விருதுநகர் – 94

விமானநிலைய கண்காணிப்பு

வெளிநாடு – 3

உள்நாடு – 8

ரெயில் நிலைய கண்காணிப்பு – 0

மொத்தம் – 9,314


https://www.youtube.com/watch?v=videoseries





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *