Tamil News 12 29 2020 395687282085419 Tamil News Spot
Share on Social Media

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் வரலாறு காணாத உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளன. கொரோனாவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள், அதே கொரோனாவால் வரலாற்றில் இல்லாத உச்சத்தையும் பதிவு செய்து வருகின்றன. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் அண்மை காலமாக இந்திய பங்குசந்தைகளில் சாதனை ஓட்டம் தொடர்கிறது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 47,660 என்ற உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13,960 என்ற புள்ளியை தொட்டு வரலாறு காணாத சாதனையை படைத்துள்ளது. அமெரிக்க பங்குசந்தையில் ஏற்பட்ட வரலாறு காணாத உயர்வு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் சந்தை மூலதனம் 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.82 ரூபாயாகவும் காணப்படுகிறது. வர்த்தக நேர தொடக்கத்தில் ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனங்கள் முன்னிலை வகித்தன. இந்த வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கின. இந்நிலையில் இரண்டாவது நாளும் பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு சற்று சாதகமாகவே உள்ளது.   வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய சந்தைகள் புதிய உச்சத்தில் முடிவடைந்தன. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *