Share on Social Media


சென்னை: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும் திட்டத்தை அறிவித்த பிரதமருக்கு, எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.  தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பில் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எதிர்கால பாதுகாப்புக்கு உதவிட வைப்பு நிதியாக அவர்களது 23 வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. இது தவிர மாதம் ரூ.2000 உதவித்தொகையும், கேந்திர வித்யாலயா பள்ளியில் இலவசமாக படிக்கும் வாய்ப்பும் வழங்குவது, ஆதரவற்ற நிலையில் உள்ள அந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பெரும் உதவியாகும். இந்த உதவி திட்டங்களை அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தமிழக பாஜ சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *