Share on Social Media

மறு அறிவிப்பு வரும் வரையில் ஹோட்டல் மூடப்பட்டிருக்கும் என்று இந்தியாவிற்கான ஏசியன் ஹோட்டல்ஸ் (வெஸ்ட்) துணைத் தலைவர் சஞ்சி சர்மா தெரிவித்திருக்கிறார்.

மேலும், “ஏசியன் ஹோட்டல்ஸ் நிர்வாகத்திடமிருந்து ஹயாத் ரீஜென்சி ஹோட்டலை நடத்த போதிய நிதி வரவில்லை. எனவே, தற்காலிகமாக ஹோட்டல் செயல்பாட்டை நிறுத்திவைக்க முடிவு செய்திருக்கிறோம். பிரச்னைக்கு தீர்வு காண ஹோட்டல் உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Hyatt Regency Mumbai

Hyatt Regency Mumbai
Photo: Hyatt Website

மகாராஷ்டிரா அரசு கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஆரம்பித்த நாளில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டலில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் தளர்வுகள் விரிவாக்கப்பட்டு மீண்டும் விமானப் பயணங்கள் தொடங்கினாலும்கூட உடனடியாக மீண்டும் ஹோட்டல் மீண்டெழுவது சவாலான விஷயமே. எனவே தவிப்பில் இருக்கிறார்கள் ஹோட்டல் ஊழியர்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *