1000 4 Tamil News Spot
Share on Social Media

ஆனால், “சவுதி இதனைச் செய்திருக்காது, எனது முழு ஆதரவையும் சவுதிக்கு தருவேன்… எப்போதும் அவர்களுக்குத் துணை நிற்பேன்” என ட்ரம்ப் ஆரம்பம் முதலே தன் நட்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதனைக் கேட்ட ட்ரம்ப்பின் சொந்த கட்சியினரே செனட் சபையில் கொதித்தெழுந்தனர். “நாங்கள் ஒருபோதும் இதை எதிர்பார்க்கவில்லை” என்றார்கள். “கஷோகியின் மிருகத்தனமான படுகொலையைக் குறைத்து மதிப்பிடவோ, கடந்து சென்றுவிடவோ முடியாது. இந்த கொடுஞ்செயலுக்கு சவுதியை கண்டித்து, கடும் தடைகளை விதிக்க வேண்டும்” என்று அவையில் பேசினார் குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் மிட் ரோமே. குறிப்பாக, “கஷோகியின் படுகொலையில் இளவரசர் முகமது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளார்” என்று சிஐஏ அறிக்கை வெளியிட்டது. இருந்தும், சவுதிக்கு எதிராகச் சிறு துரும்பைக் கூட அசைக்க மறுத்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப் அதிபரான பிறகு மேற்கொண்ட முதல் பயணத்தில் சவுதி அரேபியாவும் ஒன்று. அப்பயணத்தின் மூலம், 450 பில்லியன் டாலர் அமெரிக்காவில் முதலீடு செய்ய சவுதி ஒப்பந்தம் செய்தது. மேலும், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து 110 பில்லியன் டாலருக்கு ஆயுதப் பரிவர்த்தனை செய்தது. தொடரும் இந்தப் பொருளாதாரமே, சவுதியின் செயல்களுக்கு ட்ரம்ப்பை இணங்க வைக்கிறது. இதன்மூலம் தமக்குக் கிடைக்கும் பணம் மற்றும் அதிகார பலம் காரணமாக மத்திய கிழக்கில் அமெரிக்கா எது செய்தாலும் சவுதியை உடன்பட வைக்கிறது. ‘வியட்நாம், ஈராக்கில் அமெரிக்கா செய்ததைத்தான் இன்று ஏமனில் சவுதி செய்கிறது என்பதால் ஆச்சர்யப்பட எதுவுமில்லை’ என ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *