Share on Social Media


மதுரை : மதுரையில் நடந்த பட்டாம்பூச்சி ‘வாக்’ நிகழ்ச்சியில் மரகத அழகி, கொன்னை வெள்ளையன், நீல வரியன், சிவப்பு மடல் அழகி உள்ளிட்ட 20 வகை சிற்றின பட்டாம்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் விலங்கியல் துறை சார்பில் நடந்த இந்நிகழ்வை முதல்வர் (பொறுப்பு) ராஜேஸ்வர பழனிச்சாமி துவக்கி வைத்தார். துறை பேராசிரியர் லதா வரவேற்றார்.அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் ராஜேஷ் பேசுகையில், “ஒரு காட்டில் பட்டாம்பூச்சிகளின் வரத்தும், அதன் பெருக்கமும் அதிகமாக இருந்தால் அந்த இடம் வளமானதாக இருக்கும். தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும். வாழ்விடம் அழிப்பு, பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார்.

வளாகத்திலுள்ள பட்டாம்பூச்சிகள் கணக்கிடப்பட்டன. மரகத அழகி, சிவப்பு மடல் அழகி, கறிவேப்பிலை அழகி, வெண் சிறகன், சுற்றும் வெள்ளையன், கொன்னை வெள்ளையன், நீல வரியன், வெந்தய வரியன், ஆரஞ்சு வரியன், வெண்புள்ளி கருப்பன், அந்தி சிறகன், செவ்வந்தி சிறகன், சாம்பல் வசீகரன், மஞ்சள் வசீகரன், பழுப்பு வசீகரன், புல் மஞ்சள் உட்பட 20க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பேராசிரியை மலர் ஏற்பாடுகளை செய்தார். பேராசிரியர் முரளி நன்றி கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *