Share on Social Media

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2–1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஜிம்பாப்வே சென்ற வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. நேற்று, ஹராரேயில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லே (54), ரெஜிஸ் சகப்வா (48), ரியான் பர்ல் (31*) கைகொடுக்க, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்தது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *