லக்கிம்பூர்கெரி: விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மகன் ஆஷிஸ் மிஸ்ரா குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்களை, ‛‛நீங்கள் பைத்தியமா? நீங்கள் திருடர்கள்” என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா திட்டியது சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து உ.பி.,யின் பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜ., ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அக்.,3ல் லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது கூட்டத்திற்குள் புகுந்த கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அந்த காரை, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் ம மிஸ்ராவின் மகன் ஆஷின் மிஸ்ரா ஓட்டி வந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவினர், தாக்கல் செய்த அறிக்கையில், லக்கிம்பூர் கெரி சம்பவத்தை கொலை செய்ய முயற்சி என்ற கடுமையான பிரிவில் வழக்கை விசாரிக்க வேண்டும். கவனக்குறைவால் நடந்தது அல்ல. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்பட்ட சதி என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
இந்நிலையில் லக்கிம்பூர் கெரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்து வைத்த அஜய் மிஸ்ராவின் விசாரணை குழுவின் அறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அஜய் மிஸ்ரா, இதுபோன்ற முட்டாள் தனமான கேள்விகளை கேட்காதீர்கள். நீங்கள் என்ன பைத்தியமா? என கத்தியதுடன், மைக்கை பறிக்கவும் முயற்சித்து அந்த நிருபரை தாக்க முயன்றார். மேலும், நிருபர்களை திருடன் எனவும் திட்டினார். இது குறித்த வீடியா வைரலாகி வருகிறது.
Advertisement