Share on Social Media


மதுரை : மதுரை மாவட்டத்தில் விசாரணை செய்ய செல்லும் போலீசாரின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி., பாஸ்கரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்துகின்றனர்.

சமீபகாலமாக போலீசார் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்.,ல் வாணியம்பாடியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க.,வினரிடம் விசாரிக்க சென்ற போலீசார் தாக்கப்பட்டனர். கடந்த மாதம் சென்னை ஓட்டேரியில் மதுவிற்ற கும்பலை பிடிக்கச்சென்ற போலீசார் தாக்கப்பட்டனர். ஜூன் 2ல் வடமதுரை அருகே கதவை தட்டியவரை தட்டிக்கேட்டதற்காக ஆயுதப்படை போலீஸ்காரர் அருள்பிரிட்டோ தாக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று தகராறை விசாரிக்க சென்ற மதுரை வாடிப்பட்டி போலீஸ்காரர் மணிமாறன் மூக்கை போதையில் ராணுவவீரர் நவநீதகிருஷ்ணன் கடித்து துப்பினார். தொடர்ந்து போலீசார் தாக்கப்படுவது சக போலீசார் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கூறியதாவது: பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சியின்போதே எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதை மீறும்போது மனித உரிமை மீறலாகி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகிறோம். இதனால் நாங்கள் அதிக கடினத்தன்மையை கையாளுவதில்லை. இது சாதிய பிரச்னை, ஊர் தகராறு, தனியாக விசாரிக்க செல்லும் சமயங்களில் எங்கள் மீது தாக்குதல் நடத்த வழிவகுக்கிறது, என்றனர்.

மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் கூறியதாவது: போலீஸ்காரர் மணிமாறன் தாக்கப்பட்ட விவகாரத்தில், தகவல் கிடைத்தவுடன் தனி ஆளாக அவர் சென்றுள்ளார். ராணுவவீரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை ஸ்டேஷனிற்கு அழைத்து வர முயற்சித்தபோது தாக்குதலுக்கு ஆளானார்.கொலை முயற்சி வழக்கில் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க போலீசார் விசாரிக்க செல்லும்போது உடன் ஒருவரை அழைத்துச்செல்ல வேண்டும். அப்பகுதி ரோந்து வாகனம் உடனே செல்ல வேண்டும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன், என்றார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *