Tamil News large 2645010 Tamil News Spot
Share on Social Media

மூணாறு : கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள தங்கம் கடத்தல் பிரச்னைக்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயிவிஜயன் பதவி விலகக்கோரி மூணாறில் காங்., கூட்டணி மற்றும் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
மூணாறு காந்தி சிலை அருகே காங்., கூட்டணி நடத்திய தர்ணா போராட்டத்திற்கு தேவிகுளம் சட்டசபை தொகுதி கன்வீனர் முனியாண்டி தலைமை வகித்தார். இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ் துவக்கி வைத்தார். காங்கிரஸ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணி, மாவட்ட குழு உறுப்பினர் குட்டியாபிள்ளை, ஒன்றிய தலைவர் குமார், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் விஜயகுமார், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் காதர்குஞ்சு, பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் வெள்ளதுரைபாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
மனிதசங்கிலி
பா.ஜ. சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு தேவிகுளம் மண்டல தலைவர் அழகர் தலைமை வகித்தார். மாநிலகுழு உறுப்பினர் பிஜூ, மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், மண்டல பொது செயலாளர் ராஜேஷ், மூணாறு பகுதி தலைவர் மதியழகன், பொது செயலாளர் கந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *