Share on Social Media


திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பினராயி விஜயன், இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார்.

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தது.

latest tamil news

இதனையடுத்து, முதல்வராக பினராயி விஜயன் இன்று(மே.20) பதவி ஏற்று கொண்டார். அவருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில், 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். கடந்த முறை அமைச்சர்களாக இருந்த யாருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக, பதவியேற்பு நிகழ்ச்சியில் 500 பேர் மட்டுமே பங்கேற்றனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பதவியேற்பு விழா எளிமையாக நடந்தது.

latest tamil news

ஸ்டாலின் வாழ்த்து

கேரள முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது: கேரள முதல்வராக பதவியேற்ற எனது சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள். அவரது உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவை மக்கள் இடையே சமநிலை, அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

Advertisement





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *