Share on Social Media


கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நோயாளியாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பெண்ணை அங்கிருந்த மருத்துவர்கள் விசாரித்தபோது, பழனி கோயிலுக்கு கணவருடன் சென்ற தன்னை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். அதைதொடர்ந்து, மருத்துவர்கள் மூலம் அங்குள்ள போலீஸார் கவனத்துக்கு விவகாரம் போக, அவர்கள் வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அந்த பெண், கடந்த 19 – ஆம் தேதி தானும், தனது கணவரும் பழனி முருகன் கோயிலுக்கு சென்றதாகவும், அப்போது தனது கணவர் இல்லாத சமயம் பார்த்து மூன்று பேர் தன்னை கடத்திச் சென்று தனியார் விடுதியில் வைத்து இரவு முழுவதும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியிருக்கிறார். மறுநாள் காலை அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண், தனது கணவருடன் சேர்ந்து பழனி அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முற்பட்டபோது, அங்கிருந்த போலீஸார் தனது புகாரை வாங்க மறுத்தததாகவும் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து அந்த பெண் தளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

 பழனி

பழனி
ஈ.ஜெ.நந்தகுமார்

அவரது புகாரை பெற்ற போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை அறிந்த கேரள டி.ஜி.பி அனில்குமார், பழனி காவல் நிலைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை பரபரப்பானது. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா, பழனி டி.எஸ்.பிக்கு அலுவலகத்துக்குச் சென்று விசாரணையை மேற்கொண்டார். பாலியல் வதை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பழனிமலை அடிவாரப் பகுதியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் எஸ்.பி நேரில் விசாரணை நடத்தினார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *