Share on Social Media

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூடுதல் வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. கேரளாவில் ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி ஆட்சி அமைத்துள்ள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு, சட்டப்ேபரவையில் நேற்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் கே.என். பாலகோபால் நேற்று தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்குவதற்காக 1,000 கோடியும், இது தொடர்பான மருத்துவ உபகரணங்களுக்கு 500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுகாதார அவசரநிலையை எதிர்கொள்வதற்காக 2,800 கோடியும், கொரோனா காரணமாக தொழில் இழந்தவர்களுக்கு 8,900 கோடியும், பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும், நலிவடைந்தவர்களுக்கு கடன் வழங்குவதற்காக 8,300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கூடுதல் வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *