Share on Social Media


இந்தத் திட்டத்துக்கு 1,383 ஹெக்டேர் நிலப்பகுதி வேண்டும். அதற்காக, பெரியளவிலான சதுப்புநிலம், காட்டு நிலம், உவர்நீர் பகுதி, மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலம் ஆகியவை கையகப்படுத்தப்படும். நிதி ஆயோக் அறிக்கையின்படி, இந்தத் திட்டத்துக்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் செய்துகொடுக்க வேண்டிய மாற்று ஏற்பாடுகளுக்கு மட்டுமே சுமார் 28,157 கோடி ரூபாய் செலவாகும்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.வி.ஜி.மேனன், “இந்தத் திட்டத்தில், நிறைய பாலங்கள் அமைக்க வேண்டியிருப்பதால், அதற்கு அதிகளவிலான மண் மற்றும் கிரானைட் தேவைப்படுவது, மேற்குத்தொடர்ச்சி மலையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். கேரளாவில் அனைத்து கிரானைட் அகழ்விடங்களும் மேற்கு மலைத்தொடரில்தான் அமைந்துள்ளன. மேலும், சதுப்புநிலம், நதிகள், விவசாய நிலம், ஏரிகள் என்று பல்வேறு வகையான சூழலியல் அமைப்புகளைக் கடந்து இது அமைவதால், சூழலியல் சீர்கேடுகளும் கணக்கின்றி ஏற்படும். இந்தத் திட்டத்தின் செலவைப் பொறுத்துப் பார்க்கையில், இதனால் ஏற்படப்போகும் சமூக, சுற்றுச்சூழல், பொருளாதார விளைவுகள் ஒரு வெள்ளை யானையைப்போல் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Kole Wetlands

Kole Wetlands
Manoj Karingamadathil

அதேநேரம், பலரும் இந்தத் திட்டம் சாலை நெருக்கடி, விபத்துகள், மரணங்கள், பசுமை இல்ல வாயு வெளியீடு ஆகியவற்றைக் குறைப்பதில் பங்கு வகிக்கலாம் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். அதோடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நகரங்களின் வளர்ச்சியை வேகப்படுத்துவதிலும் இந்தத் திட்டம் பங்கு வகிக்கும் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

கேரளா பரிஸ்திதி ஐக்கிய வேதி போன்ற சுற்றுச்சூழல் கூட்டமைப்புகள், இதைவிட நிலைத்தன்மை வாய்ந்த சூழலியல் ரீதியாகக் கேடு விளைவிக்காத வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று கோருகின்றனர். மேலும், 63,941 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் கடுமையான வெள்ளம், நிலச்சரிவு, கடலோர அரிப்பு ஆகியவற்றைச் சந்திக்கும் மாநிலத்தில் இவ்வளவு பெரிய பொருள்செலவில் ஒரு திட்டம் அவசியமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *