Share on Social Media


நடந்து முடிந்த கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் மஞ்சேஸ்வரம், கோணி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன். அவர் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. கே.சுரேந்திரன் 2016 சட்டசபைத் தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அவரது பெயரைப் போன்று வரும் பி.எஸ்.பி வேட்பாளர் கே.சுந்தர 467 வாக்குகள் பெற்றிருந்தார். ஒருவேளை கே.சுந்தர போட்டியிடாமல் இருந்தால் கே.சுரேந்திரன் வெற்றிபெற்றிருப்பார் என பா.ஜ.க-வினர் கருதினர். இந்தநிலையில், கடந்த தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் மீண்டும் கே.சுந்தர வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதுடன், திடீரென பா.ஜ.க-வில் இணைந்தார். இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த கே.சுந்தர, “நான் போட்டியிடாமல் வேட்புமனுவை வாபஸ் பெற்றால், 15 லட்சம் ரூபாயும், ஒரு ஸ்மார்ட்போனும் தருவதாக பா.ஜ.க-வினர் கூறினர். முதற்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாயும், ஸ்மார்ட்போனும் தந்தனர். மீதிப் பணத்தைக் கேட்டதற்கு வெற்றிபெற்ற பிறகு பார்க்கலாம் என்றனர். அதன் பிறகு என்னை ஏமாற்றிவிட்டனர்” என்றார். இது குறித்து கே.சுந்தர காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பா.ஜ.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ்

கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ்

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ் கூறுகையில், “பி.எஸ்.பி இந்தியாவின் முக்கிய தேசியக் கட்சிகளில் ஒன்று. கே.சுந்தர கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டார். இந்த முறை சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்குவதாக எழுதிக்கொடுத்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். அதை வற்புறுத்தி வாபஸ் பெறவைத்தததாக எப்படி போலீஸ் வழக்கு எடுக்கும்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *