Share on Social Media



திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் முழு ஊரடங்கு மே 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.  நோய் பரவல் மெதுவாக குறைந்து வருகின்ற போதிலும் முழு ஊரடங்கை நீக்கும் வகையில் நிலைமை இன்னும் சீராகவில்லை. எனவே ஜூன் 9 வரை முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், சில நிபந்தனைகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும். வங்கிகள் மாலை 5 மணி வரை செயல்படலாம். கள்ளுக்கடைகளில் பார்சல் மூலம் கள் விற்பனை செய்யலாம்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *