Share on Social Media

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 5வது முறையாக பதக்கத்தை உறுதி செய்ததன்மூலம் கொரோனா தொற்றை வீழ்த்தியது போல உணர்கிறேன்,’’ என, ஷிவா தபா தெரிவித்துள்ளார். துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 64 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஷிவா தபா, குவைத்தின் ஓடாவை வீழ்த்தினார். இதன்மூலம் இத்தொடரில் தனது 5வது பதக்கத்தை உறுதி செய்தார். ஏற்கனவே இவர், ஒரு தங்கம் (2013), ஒரு வெள்ளி (2017), இரண்டு வெண்கலம் (2015, 2019) வென்றிருந்தார். தவிர இவர், இத்தொடரில் அதிக பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *