Share on Social Media


திருப்பூர்:வாக்காளர் பட்டியல் அடிப்படையில், ‘டோக்கன்’ வழங்கி, அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில், தடுப்பூசி முகாம் நடத்த, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.தடுப்பூசிக்காக. மக்கள் கூட்டம் சேர்வதால், தொற்று பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, ஓட்டுச்சாவடி மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும், ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், ‘டோக்கன்’ வினியோகம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.தடுப்பூசி முகாம் நடக்கும் பகுதிகள் குறித்து, ஒருநாள் முன்னதாகவே மக்களுக்கு அறிவிப்பு செய்யப்படும். கிராமம், நகராட்சி, மாநகராட்சிகளில், அந்தந்த மக்களுக்கான ஓட்டுச்சாவடிகள், தடுப்பூசி மையங்களாக செயல்படும்.மக்கள் அதிகம் கூட்டம் சேர்வதை தடுக்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அடிப்படையில், சுழற்சி முறையில், ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், ‘டோக்கன்’ வழங்கி தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி எண்ணிக்கை, வழக்கிய டோக்கன் விவரம், அடுத்து தடுப்பூசி போடப்படும் நாள், பயனாளிகள் எண்ணிக்கை ஆகிய விவரங்கள், ஓட்டுச்சாவடி தகவல் பலகையில் வெளியிடப்படும்.தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம், ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் வினீத் கூறியதாவது:தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்களில், முன்னுரிமை பட்டியல் அடிப்படையில், சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும். தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு, கூடுதல் தடுப்பூசி ஒதுக்கப்படும்.இனிவரும் நாட்களில், ‘டோக்கன்’ பெற்றவர்கள் மட்டும், சம்பந்தப்பட்ட முகாமுக்கு சென்று, தடுப்பூசி போட்டு கொள்ளலாம். டோக்கன் பெறாதவர்கள், முகாம் நடக்கும் இடத்தில் வந்து கூட்டம் சேர வேண்டாம்.டோக்கன் பெற்று கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வரும் மக்கள், கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
அதிகாரிகள் குழுகண்காணிக்கும்துணை தாசில்தார் அந்தஸ்திலான 75 அதிகாரிகள், தடுப்பூசி மையங்களில், கண்காணிப்பு மேற்கொள்வர்; அரசியல் கட்சியினர், தனி நபர் தலையீடு இன்றி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலும்.
ஓட்டுச்சாவடி, தடுப்பூசி மையமாகிறது
ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம் ‘டோக்கன்’ தகவல் பலகையில் விவரம் வெளியீடு உள்ளாட்சி அமைப்பு மூலம் அறிவிப்பு ‘டோக்கன்’ பெற்றவர் மட்டும் வரலாம் தொற்று தடுப்பு நெறிமுறையில் கண்டிப்பு ‘டோக்கன்’ பெறாதவருக்கு அனுமதி இல்லை

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *