Share on Social Mediaகுளிர்காலம் வந்தால் போர்வைக்குள் ஒளிந்து சுகமாக தூங்க விரும்புவீர்கள். ஆனால் இந்த பருவம் சருமத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கும். அதிலும் போதுமான கவனிப்பு இல்லாவிட்டால் சருமம் வறட்சியாக மாறலாம். உதடுகளில் விரிசல் உண்டாகலாம். கூந்தல் அதிக வறட்சியாக இருக்கலாம். குளிர்காலத்தில் சருமம், கூந்தல் மற்றும் உதடுகள் ஈரப்பதமாக வைத்திருக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

​உணவில் ஒரு கவனம் இருக்கட்டும்

சரும அமைப்புக்கு வெளிப்புற சிகிச்சைகள் மட்டும் அல்ல, உள்புறத்துக்கு உணவு உட்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். சரியான உணவு சருமத்தை உள்ளிருந்து புத்துயிர் பெற செய்கிறது.

முடி ஆரோக்கியமா வளரணும்னு ஆசையா இருந்தா வீட்லயே இந்த எண்ணெய் தயாரிச்சு பயன்படுத்துங்க!

தண்ணீர் தினசரி 2 முதல் 3 லிட்டர் வரை குடிக்க வேண்டும். இதனால் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க முடியும். சரும கோளாறுகளை தடுக்க இவை உதவுகிறது. தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்க வேண்டும். ஆலிவ் எண்னெய் சருமத்தை மென்மையாக வைத்திருக்க செய்கிறது.

​மாய்சுரைசர் செய்யுங்கள்

samayam tamil Tamil News Spot

குளிர்காலம் என்று மாய்சுரைசர் செய்வதை தவிர்க்க கூடாது. குளிர்ந்த காற்று வறண்ட சரும நிலையை மோசமாக்குகிறது. அதனால் ஈரப்பதம் அளிக்க க்ரீம்கள் அவசியம். சருமத்தில் ஈரப்பதத்தை பாதுகாக்க மற்றும் நிரப்ப ஒவ்வொரு சுத்திகரிப்புக்கு பிறகும் ஈரப்பதம் செய்வது அவசியம். குறிப்பாக மாலை நேரங்களில் மாய்சுரைசர் செய்யுங்கள்.

கண்களை சுற்றி மற்றும் உலர்ந்த பகுதிகளில் உங்கள் சருமத்துக்கேற்ற மாய்சுரைசர் பயன்படுத்தலாம். அல்லது இயற்கையாக தயிர் அல்லது பால் சருமத்துக்கேற்ப பயன்படுத்தலாம்.

​சருமத்துக்கு எண்ணெய் சிகிச்சை

samayam tamil Tamil News Spot

குளிப்பதற்கு முன்பு சருமத்தை சிறிது தேங்காயெண்ணெயுடன் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் இருக்கும் வறட்சி மற்றும் விரிசல்களை குணமாக்க செய்யும். சருமத்துக்கு கூடுதல் நெகிழ்ச்சி அளிக்கும் க்ரீம் சோப் பயன்படுத்தவும்.

வெளியில் செல்வதற்கு முன்பு முகத்தை கழுவுங்கள். வெளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் மீண்டும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். வெப்பநிலை மாற்றங்கள் சருமத்தின் மேற்பரப்பில் இருக்கும் நுண்குழாய்களை வெடிக்க செய்யும்.

குளிக்க பயன்படுத்தும் தண்ணிரீல் சில துளிகள் எண்ணெய் சேர்க்கவும். இது குளிக்கும் போது சருமம் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். குளிர்காலத்தில் சூடான நீரை பயன்படுத்தக்கூடாது இது சருமத்தின் இயற்கை எண்ணெய்களை குறைக்கும். அதே நேரம் குளியல் நேரத்தை குறைக்கவும்.

​ஆளிவிதை, பாதாம் மற்றும் நெய் சேருங்கள்

samayam tamil Tamil News Spot

ஆளிவிதைகள், பாதாம் மர்றும் நெய் ஆகியவற்றை சேர்க்கவும். இது முக்கிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிறைய செய்யும். எண்ணெய் வடிவில் மற்றும் மாத்திரைகளாக கிடைக்கிறது.

பாதாம் , அக்ரூட் பருப்புகள், முழு பால், புதிய பாலாடைக்கட்டி மற்றும் நெய் போன்றவற்றை சேர்த்து வந்தால் சருமத்துக்கு கொழுப்பு கிடைக்கும்.

இயற்கை உணவில் நெல்லிக்காய் சேர்க்கலாம் இது வைட்டமின் சி நிறைவாக கொண்டதால் இது கொலாஜன் மேம்படுத்த செய்கிறது.

​உதடு பராமரிப்பு

samayam tamil Tamil News Spot

உதடுகளை நாக்கால் ஈரப்படுத்துவதை தவிர்க்கவும். உதடுகளின் மேற்பரப்பை கடிக்க வேண்டாம். இதனால் உதடு பாதிக்கப்படுமே தவிர குணமாகாது. இது கருப்பு நிற உதடுகளை தந்து உதட்டை தடிமனாக மாற்றும்.

லிப் பாம் வாங்கி உதடுகளில் பல முறை தடவவும். லிப் பாம் வாங்கும் போது எஸ்பிஎஃப் 15 அல்லது 20 உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். லிப் பாம் வாங்கும் போது வைட்டமின் ஈ மற்றும் ஷியா வெண்ணெய் கலந்த தயாரிப்பை பயன்படுத்துங்கள்.

இயற்கையுடன் மசாஜ் செய்வதாக இருந்தால் இரவு நேரத்தில் நெய் தடவி விடுவது உதடுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

​கூந்தல் பராமரிப்பு

samayam tamil Tamil News Spot

தலைமுடியை ஈரமாக்கி அதனோடு வெளியே செல்ல வேண்டாம். இதனால் முடி உடைந்து போகலாம். தலைமுடியில் ப்ளோ ட்ரையர்கள் மற்றும் கர்லிங் கருவிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அல்லது இதை தவிர்க்க முடியாமல் பயன்படுத்தினாலும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்.

Monsoon skin care tips : மழைக்கால சரும பராமரிப்பு செய்ய இந்த 5 பானங்கள் போதுமாம்! இப்பவே ட்ரை பண்ணுங்க!

முடியை சூரியனிடமிருந்து பாதுகாக்க வருடத்தின் 365 நாட்களும் முடிக்கு பராமரிப்பு வேண்டாம். சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாவிட்டால் நிறமி அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் உங்கள் சருமம், உதடு மற்றும் கூந்தல் பராமரிப்பு உங்கள் உடல் நிலைக்கேற்ப சரி செய்ய சிறந்த சரும பராமரிப்பு நிபுணரை அணுகுங்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *