Share on Social Media


திண்டுக்கல்– -மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை குறைக்கவும், பற்றாக்குறையாக உள்ள ஸ்டேஷன்களில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பொதுவாக எஸ்.பி., அலுவலகத்தில் ஆவண காப்பகம், குற்றப்பிரிவு, கொரோனா தடுப்பு பிரிவு, சைபர் செல், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தனிப்பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.இப்பிரிவுகளின் சில அவசிய செயல்பாடுகளுக்கு கூடுதல் ஆட்கள் தேவை என்பதால், ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாரே இங்கு பணியாற்றுவர். இதனால் ஸ்டேஷன்களில் போலீஸ் பற்றாக்குறை ஏற்படும். இம்முறையே அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது.இவ்வாறு ஸ்டேஷன்களில் ஏற்படும் பற்றாக்குறையை போக்க மாவட்ட எஸ்.பி.ஸ்ரீனிவாசன் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

எஸ்.பி., அலுவலகத்தில் பணியாற்றுவோர் பெரும்பாலும் நகர் மற்றும் புறநகர் பகுதி ஸ்டேஷன்களில் உள்ளவர்கள். இந்த ஸ்டேஷன்களில் அதிக குற்றங்கள் நிகழ்கின்றன.இதை தவிர்க்க இந்த ஸ்டேஷன்களில் இருந்து, எஸ்.பி, அலுவலகத்தில் பணியாற்றுவோரை அதிக குற்றம் இல்லாத பிற ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்துள்ளார். அவர்களது பணி திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகம்தான் என்றாலும், அவர்களுக்கான பணியிடம் புதிய ஸ்டேஷனில் இருக்கும்.

இதனால் இதுவரை இருந்த ஸ்டேஷன்களில் காலியிடம் உருவாகும். அந்த இடத்திற்கு ஆயுதப்படை போலீசாரை இடம்மாறுதல் செய்துள்ளார்.இதனால் இந்த ஸ்டேஷன்களில் போலீஸ் பற்றாக்குறை இருக்காது. இதுவரை ஸ்டேஷன் பணியை எதிர்பார்க்கும் ஆயுதபடை போலீசுக்கும் இடம் மாறுதல் கிடைத்துவிடும்.

அவர்களைக் கொண்டு சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து பணிகளை கவனிக்க தேவையான போலீசார் இருப்பர்.இந்த வகையில்தான் முதற்கட்டமாக திண்டுக்கல் நகர், தாலுகா, தாடிக்கொம்பு ஸ்டேஷன்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதேமுறையில் போலீஸ் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *