Share on Social Media

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரன் 36 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் இறங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.35,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,4475க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் உயர்ந்து ரூ.75க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றது. இந்த ஜூலை மாதத் தொடக்கமும் விலையேற்றத்திலேயே தொடங்கியுள்ளது.

தொடர்ச்சியாக விலையேற்றம் காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சர்வதேசச் சந்தையில் முதலீட்டாளர் தங்கம் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயந்துவருகிறது. சமீபத்தில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை,  கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சுபநிகழ்வு வைத்துள்ள மக்களுக்கு தங்கத்தின் விலை இன்பம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *